2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அடிப்படை வசதி கோரி யாழ். முஸ்லிம்கள் சாகும்வரை உண்ணாவிரதம்

Super User   / 2011 மார்ச் 10 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்து மீள்குடியேறிய முஸ்லிம்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை இன்று வியாழக்கிழமை பொம்மைவெளி பிரதேசத்தில் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட இவர்களை, அரச உயர் அதிகாரிகள் யாரும் இதுவரை நேரில் வந்து  பார்வையிடாமையால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்து பொம்மைவெளி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இதேவேளை, யாழ். பொம்மைவெளி பகுதியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த உண்ணவிரத போரட்டத்தில் ஈடுபடுள்ள முஹம்மட் நௌஷாட் சற்று முன்னர் வந்தியெடுத்து மயக்கமுற்ற நிலையில் சுமுகமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

கடந்த வருட நடுப்பகுதி முதல் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் மீள்க்குடியேற்றப்பட்டு வருகின்றனர். (படங்கள்:கவிசுகி)


  Comments - 0

  • Ahamed Thursday, 10 March 2011 04:55 PM

    முஸ்லிம்களை பிரதிதுவப் படுத்தும் முஸ்லிம் அமைச்சர்கள் ஏன் மௌன விரதம்?

    Reply : 0       0

    mam.fowz Thursday, 10 March 2011 10:39 PM

    எங்கோ ? றிசாத் புனர்வாழ்வு அமைச்சர்... பழைய நிலைமை மறந்து விட்டாரோ .........

    Reply : 0       0

    xlntgson Friday, 11 March 2011 08:51 PM

    பொதுமக்களின் கவன ஈர்ப்புப் பிரேரணை, அவ்வளவு தான்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X