Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கரையோரப்பகுதி மீனவக் குடும்பங்களின் நன்மை கருதி பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் மீன்தூள் ஆலையொன்று இந்த மாதம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் இ.ரவிந்திரன் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் நடவடிக்கையின்போது வலைகளில் அகப்படும் சிறியரக மீன்கள் மற்றம் மீன்கழிவுகள் அதிகமாக கிடைக்கக் கூடியதாகவிருக்கும். இதனை மூலப்பொருட்களாகக் கொண்டு இந்த மீன்தூள் ஆலை நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த மீன்தூள் ஆலையானது நெக்ரேப் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பின் மூலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இவ்வாறான மீன்தூள் ஆலையொன்று ஏற்கெனவே யாழ். மண்டைதீவுப் பகுதியில் 1982ஆம் ஆண்டு காலப்பகுதியில் செயற்பட்டு வந்தது. அதன் பின்னர் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக அது செயலிழந்துபோயுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
13 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
56 minute ago
1 hours ago