Menaka Mookandi / 2011 மே 02 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தராக நியமனம் பெற்றுப் பதவியேற்றுள்ள பேராசிரியர் செல்வி. வசந்தி அரசரட்ணத்தைப் பாராட்டிக் கௌரவிக்கும் விழா இம்மாதம் இறுதியில் சாவகச்சேரி சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள தென்மராட்சிக் கலைமன்ற மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தென்மராட்சி மக்கள் சார்பில் இடம்பெறவுள்ள இந்த விழாவை ஏற்பாடு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.
இதன்போது விழாக் குழுவின் தலைவராக சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் அ.கயிலாயபிள்ளை, செயலாளராக திருக்கணித நிலைய முகாமையாளர் கா.சிவஞானசுந்தரம், பொருளாளராக சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றச் செயலாளர் க.சுதாகரன் ஆகியோருடன் இருபது பேரைக் கொண்ட விழாக்குழு அமைக்கப்பட்டது.
விழா தொடர்பான ஆலோசனைகளை வழங்க விரம்புவோர் அதிபர் அ.கயிலாயபிள்ளையுடன் 0212270351 அல்லது 0774131434 என்ற தொலைபேசி இலக்கங்களிலோ akailash03@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாத் தொடர்பான சிறப்பு மலர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
24 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
52 minute ago