Suganthini Ratnam / 2011 மே 05 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பருத்தித்துறை, தும்பளைப் பகுதியில் கிணற்றிலிருந்து பாடசாலை மாணவரொருவரின் சடலம் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனான சசி அமிலன் (வயது 10) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.
குறித்த சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக இது உறவினர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
52 minute ago