Suganthini Ratnam / 2011 மே 06 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நெல்லியடி காவலரணில் கடமையிலிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் ரி - 56ரக துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டியைச் சேர்ந்தவரும் மதவாச்சியில் வசித்து வருபவருமான டபிள்யூ.சி.எஸ்.வீரமந்திரி (வயது 25) என்பவரே ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இரவு மேற்படி இராணுவச் சிப்பாய் நெல்லியடி காவலரணில் கடமையிலிருந்த வேளையில் ரி - 56ரக துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் குண்டு சிப்பாயின் வயிற்றை துளைத்துக்கொண்டு முதுகுப்புறமாக வெளியேறியது.
ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள்; மூவர் போராடி வருகின்றனர்.
24 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
52 minute ago