2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

குருத்துவ திருநிலைப்படுத்தல்

Suganthini Ratnam   / 2011 மே 12 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மரியன்னை பேராலயத்தில் குருத்துவ திருநிலைப்படுத்தும் நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி  காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக யாழ். ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

குருத்துவ நிலைக்கு திருநிலைப்படுத்தப்படவுள்ள அருட்சகோதரர்களான லக்ஸ்மன், எல்மோ, சுமன் ஆகியோருக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை திருநிலைப்படுத்தும் சடங்கை நிறைவேற்றி வைக்கவுள்ளார்.

குருத்துவ திருநிலைப்படுத்தப்படவுள்ள அருட்சகோதரர்களுக்காக அவர்களது அர்ப்பண குருத்துவ வாழ்விற்காக இறைவனிடம் விசேடமாக செபிப்பதற்காக யாழ். மாவட்ட கத்தோலிக்க மக்களை யாழ். ஆயர் இல்லம் அழைத்து நிற்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X