Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Kogilavani / 2011 மே 12 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு கடற் பிரதேசங்களான தொண்டைமானாறு தொடக்கம் சுண்டிக்குளம் வரையிலான கடற் பகுதிகளில் மீன் வளம் குறைந்துள்ளதால் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்கவேண்டும் என அப்பிரதேச மீனவர்கள் கோரினர்.
தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று ஆரம்பமாகியுள்ள இவ்வேளையில் முந்திய காலங்களைப் போல காற்று வீசவில்லை.
காற்று உச்சக்கட்டத்தில் இருக்க வேண்டிய இக்காலக்கட்டத்தில் தொண்டைமானாறு முதல் முனை வரையான வடமராட்சி வடக்கு கடற்பகுதியில் அதிகமாக சாளை மீன் பிடிக்கப்படுவது வழக்கமாகும்.
அதேபோல கற்கோவளம் முதல் சுண்டிக்குளம் வரையான வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் நெத்திலி மீனும் ஏனைய மீன்களும் அதிகமாக பிடிக்கப்படுவதுண்டு.
ஆனால் இம்முறை சாளை மீன் பருவ காலத்தில் சாளை மீன்களையும் நெத்திலி மீன் பருவ காலத்தில் நெத்திலி மீன்களையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை இருந்து வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 May 2025