Suganthini Ratnam / 2011 மே 13 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் இந்திய வீட்டுத்திட்டம் ஆரம்பிப்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில்நுட்ப பொறியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் இவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்திய வீட்டுத்திட்ட பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் யாழ். அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் 150 வீடுகள் கட்டப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
யாழ். பிரதேச செயலகத்தில் 40 வீடுகளும் நல்லூர் பிரதேச செயலகத்தில் 50 வீடுகளும் தெல்லிப்பளைப் பிரதேச செயலகத்தில் 30 வீடுகளும் காரைநகர் பிரதேச செயலகத்தில் 30 வீடுகளும் கட்டப்படவுள்ளதாக யாழ். அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
45 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago