Super User / 2011 மே 13 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் மீளக்குடியேறிய மக்களில் 10 குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு யாழ். வணிகர் கழகத்தினால் 10 லட்சம் ரூபா பெறுமதியான கோழி வளர்ப்பிற்கான நல்லின கோழி குஞ்சுகளும் கோழிக்கூடுகளும் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மிகவும் வறிய நிலையில் வாழும் மருதங்கேணி மீள் குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தினைக்; கருத்திற்கொண்டு அம்மக்களின் வாழ்வியலை முன்னேற்றுவதற்காக யாழ். வணிகர் கழக அங்கத்தவர்களின் நிதியில் இருந்து இந்த வாழ்வாதார உதவித்திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ். வணிகர் கழகத் தலைவர் எஸ். ஜெயசெகரம் தெரிவித்துள்ளார்.
மீளக்குடியேறிய மக்களின் வாழ்வியலை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு யாழ் .வணிகர் கழகம் செயற்படுவதாகவும் அவர்களின் முன்னேற்றத்திற்காக மேலும் பல உதவித்திட்டங்களை யாழ். வணிகர் கழகம் செய்வதற்கு தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
44 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago