Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Super User / 2011 மே 17 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தென்னிந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பிற்குள் வந்து றோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபடுவதோடு கடல் வளங்களையும் முற்றாக அழித்துவிட்டு செல்கின்றனர். இவ் விடயம் தொடர்பாக பலரிடம் எடுத்துக் கூறியும் அந்த நடவடிக் கைகள் இன்னும் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.
இதேவேளை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 14ஆம் திகதி மன்னாரிலுள்ள திரு றைக் கலாமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த தென்னிலங்கை மீனவர்களுடன் இணைந்து உயிரைப் பணயம் வைத்தாவது தடுப்பது எனவும் மீனவர்கள் 25 குதிரைவலுக் கொண்ட இயந்திரங்களைக் கொண்டு தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
இந்திய மீனவர்களின் சட்டவிரோதமான இந்த நடவடிக்கையால் எமது மீனவர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதோடு பல குடும்பங்கள் தற்கொலை செய்யும் நிலையில் உள்ளன. எனவே இவ்வாறான பிரச்சினை களை ஜனாதிபதியிடமும், கடற்தொழிற்துறை அமைச் சரிடமும் எடுத்துக் கூறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago