Suganthini Ratnam / 2011 மே 18 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். சிறைச்சாலைக்கு புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் ஆரம்பிக்கப்படும் என யாழ். சிறைச்சாலையின் உதவி மேற்பார்வையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
வெசாக் தினமான நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். சிறைச்சாலையில் 9 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
2,500 கைதிகளை தங்கவைக்கக்கூடிய வசதிகளுடன் புதிய சிறைச்சாலைக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதி வழங்கியுள்ள அரசாங்கம், 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான நிகழ்வுகள் நடைபெறும்போது இடப்பற்றாக்குறை காணப்படுகிறது. போதியளவான வசதிகள்; இல்லை. கைதிகளை பாதுகாப்பாக சிறை வைப்பதிலும் சிக்கல் காணப்படுகிறது.
வீதியோரத்தில் சிறைச்சாலை அமைந்துள்ளதால் கைதிகள் தப்பிச் செல்வதற்கு இலகுவாகவுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டே நவீன முறையில் புதிய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளதாக சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
13 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago