2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வடமராட்சி கிழக்கு பகுதிகள் விரைவில் மின்னொளி பெறும்: யாழ். மின்சாரசபை

Suganthini Ratnam   / 2011 மே 18 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். வடமராட்சி கிழக்கில் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ், மாமுனை தொடக்கம் ஆழியவளை வரையான பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் பிரதான வீதிகள், குறுக்கு வீதிகள் உட்பட சகல வீதிகளுக்கும் மின்விநியோகம் வழங்குவதற்கான நடவடிக்கையை  யாழ். மின்சாரசபை முன்னெடுத்துள்ளது.

இப்பிரதேசங்களில் இன்னும் ஆறு மாதங்களுக்குள் முழுமையாக மின்சாரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுக்கட்டிடங்கள், பாடசாலைகள் மற்றும் சனசமூக நிலையங்கள் ஆகியவற்றக்கு மின்சாரம் வழங்குவதற்கான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும்  யாழ்.மின்சாரசபை தெரிவித்துள்ளது.

யாழ். மின்சார சபையினரால் மிகக்குறுகிய காலத்திற்குள் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு விடும் என யாழ். மின்சாரசபையின் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X