2025 மே 21, புதன்கிழமை

யாழில் மாசடையும் நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 மே 18 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதனைப் பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பிலிருந்து வருகை தந்த நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள் யாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீர் பற்றிய ஆராய்ச்சியொன்றில் ஈடுபட்டனர். அவர்கள் தமக்கு வழங்கிய ஆய்வறிக்கையில் பல அதிர்ச்சியான விடயங்கள் இருப்பதாகவும் யாழ். அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

யாழ். நகர், நல்லூர், தெல்லிப்பளை, பச்சிலப்பள்ளி பிரதேசங்களில் மேற்கொண்ட நிலத்தடி நீர்பற்றிய ஆராய்ச்சி அறிக்கைகள் கிடைத்துள்ளது. இவற்றை அடிப்படையாக வைத்துப்பார்க்கும்போது யாழ்ப்பாணத்தில்; நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் நீர் மாசடையாமல் பாதுகாத்து தூய நீரை யாழ். மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .