2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாநகரசபை உறுப்பினர் விந்தனின் உயிருக்கு அச்சுறுத்தல்

Suganthini Ratnam   / 2011 மே 19 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் என்பவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் யாழ். பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள்; ஆணைக்குழு யாழ். அலுவலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அரியாலை புங்கன்குளம் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு அருகில் இனந்தெரியாத நபர்கள் நடமாடி அயலவர்களிடம் விசாரித்ததாகவும் இவர்கள் ஆயுதங்களுடன் காணப்பட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக யாழ். பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X