2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இவ்வருட இறுதிக்குள் யாழில் மீள்குடியேற்றம் பூர்த்தி: அரச அதிபர்

Menaka Mookandi   / 2011 மே 19 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் இந்தவருட இறுதிக்குள் முற்றாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டு மக்கள் இடைத்தங்கல் நிலையங்களில் வாழும் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும் என யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்தகால யுத்த நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்து இடைத்தங்கல் நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்துவந்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மக்களில் 80 வீதமானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் மீதி 20 வீதமான மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்துகொடுக்கப்பட்டு வருவதாகவும் இவர்களுக்காக வீடுகள், குடிநீர்வசதி, மின்சாரம், பாலர் பாடசாலை மற்றும் உலர் உணவுப் பொருட்களின் விநியோகங்கள் என அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

அண்மையில் மீள்குடியேறிய வலி. வடக்கைச் சேர்ந்த 9 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் உட்பட்ட மக்களுக்கு அவர்களது காணிகளைத் துப்பரவு செய்யதற்கு நிதியுதவி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அரசுடன் பேசிவருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X