Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மே 19 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். கோட்டை முனீஸ்வரர் கோயில் வளாகத்திற்குள் தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் அசைவ உணவுகளை சமைத்து வருகின்றனர். இவர்களால் கோயிலின் புனிதத் தன்மையைக் கெடுக்கப்படுவதாக யாழ். கோட்டை முனீஸ்வரர் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தென்பகுதி சுற்றிலாப் பயணிகள் அதிகளவில் யாழுக்கு விஜயம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்கியிருப்பதற்கு பொது இடங்களைப் பயன்படுத்துவதோடு வீதிகளின் ஓரங்களில் இளைப்பறுகின்றனர்.
அத்தோடு கோயில் வளாகங்களுக்குள் தங்கி தங்களது அன்றாடக் கடமைகளைச் செய்து வருவதுடன் கோயிலின் புனிதத்தன்மையை அறியாமல் செயற்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .