Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மே 19 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி விவகாரங்களில் பெண்களின் பங்குபற்றலை அதிகரிக்கும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பிரதேச செயலகங்களில் கூடுதலான பெண்களுக்கு நியமனங்களை வழங்கவுள்ளதாக இலங்கை பெண்கள் நிறுவகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த பிரதேசங்களில் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறைந்தளவிலேயே உள்ளனர். எனவே, 40 பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை புதிதாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக பெண்கள் பணியக பணிப்பாளர் சூலாநந்த கூறினார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆதரவு சேவைகளை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. பெண்களுக்கன வாழ்வாதார திட்டங்கள், சிறு முயற்சியாண்மைகள், வீட்டு வன்முறை தொடர்பான விழிப்புணர்வுத் திட்டங்கள், கட்டிளம் பருவத்தினரின் பிரச்சினைகளை கையாளுதல் போன்ற திட்டங்களுக்கு பெண் மேற்பார்வையாளர்களே பொருத்தமானவர்கள்' என அவர் கூறினார்.
பெண்களுக்கான பிரதேச சம்மேளனம் பெண்களுக்காக நடத்தும் சூழல் நிதி கடன் திட்டத்தையும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களே மேற்பார்வை செய்வரெனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .