Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 20 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இனரீதியாக பிரிந்த நாடாக அல்ல. அனைவரும் ஒரே நாட்டு மக்களாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பாடுபட வேண்டுமென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலக விருந்தினர் விடுதியை இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
30 வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய பகுதிகளுக்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது.
தற்போது அமைதியானதொரு சூழ்நிலை ஏற்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தி;ற்கு வருகை தருவோரின் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது யாழ்ப்பாணம் அபிவிருத்தியில் முன்னேறிக் காணப்படுகிறது. இதனை ஏற்படுத்தித் தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாண மக்கள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.
யாழ். மாவட்டத்திற்கான அபிவிருத்தியில் இந்த அரசாங்கம் என்றும் கைகொடுத்து நிற்கும் என்றார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உட்துறை அமைச்சின் செயலாளர் அபயகோன், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம், யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, யாழ். செயலக அதிகாரிகள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .