Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 20 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி,நவம்)
ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டாலும் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. ஜனநாயக ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் எமது போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
உடுவில் பிரதேச செயலக கட்டிடத் திறப்பு விழா பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
எங்களை நாங்களே ஆளக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் அவர்களது பிரதேசங்களில்; வாழ்வதற்கானதொரு சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் மனிதாபிமானப் பணிகளிலும் ஆக்கபூர்வமான நிகழ்வுகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் பங்குபற்றி வருகின்றோம்.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு அமைச்சர்கள் விஜயம் செய்தால் அவர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியவர்கள் நாங்கள் தான். தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையில் தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களிலும் ஆக்கபூர்வமான நிகழ்வுகளிலும் நாங்கள் பங்குபற்றி வருகின்றோம்.
தென்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகள் யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவொரு மகிழ்ச்சியான விடயம் என்றார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உட்துறை அமைச்சின் செயலாளர் அபயகோன், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராக்ச, எஸ்.சரவணபவன், ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம், யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, யாழ். செயலக அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .