Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மே 20 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் நினைவு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதில் பேராயர் ஜெபநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், முன்னாள் மாநகரசபை ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம், பேராசிரியர்களான சிற்றம்பலம், சிவச்சந்திரன் மற்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினர் விந்தன், சூழலியலாளர் ஐங்கரநேசன் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதில் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றதோடு நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றன. இதேவேளை நிகழ்ச்சி முடியும் தறுவாயில் திடீரென நுழைந்த துப்பாக்கி ஏந்திய படையினர் உள்ளேயிருந்த எவரையும் வெளியே செல்லவிடாமல் சுமார் 30 நிமிடங்கள் வரையில் அங்கு நிலைத்திருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .