2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மீனவர் பிரச்சினை; இந்திய துணைத் தூதருடன் வடகடல் மீனவப் பிரதிநிதிகள் இன்று சந்திப்பு

Menaka Mookandi   / 2011 மே 20 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் குறித்து ஆராய்வதற்காகவும் வடகடல் மீனவர்களது பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடும் வகையில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரி வி.மகாலிங்கத்தை இன்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் வடபகுதிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் நடவடிக்கை தற்போது குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் இந்திய மீனவர்கள் வடபகுதி கடற்பரப்புக்குள் வராமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தவே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக வடபகுதியில் கடல் வளம் குறைந்து மீனவர்கள் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும், இதனால் மீனவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இனிவரும் காலங்களில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் தொடராமல் இருப்பதற்கான முதல்படியாக இந்த சந்திப்பு அமையும் என்றும், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X