2025 மே 21, புதன்கிழமை

ஒரே வீட்டில் இருதடவை கொள்ளை

Kogilavani   / 2011 மே 21 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

தென்மராட்சி மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த பத்து நாட்களுக்குள் தொடர்ந்து இருதடவைகள் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளன.

முல்லைத் தீவில் இருந்து இடம் பெயர்ந்து மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஆசிரியையின் வீட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவ்வீட்டிற்கு அருகில் வசித்து வந்த  அயலவர்கள், நேற்று முன்தினம் மரண வீடொன்றிக்குச் சென்றிருந்த வேளையில் வீட்டின் கதவை உடைத்து உள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த கையடக்கத் தொலை பேசிகள் இரண்டு, உண்டியலில் சேர்த்து வைக்கப்பட்ட பணம், உடைகள் ஆகிய பொருட்களை  கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்கள்.

இதேவேளை, கடந்த 9 ஆம் திகதி இதே வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் சுமார் மூன்று லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட இரண்டு சங்கிலிகள், வலையல்கள், கைச்சங்கிலி என பல பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து குறிப்பிட்ட வீட்டிற்க்குச் சென்ற பொலிஸார் கைத்தடயங்களை சேகரித்துச் சென்றுள்ளதுடன் விசாரனைகளையும் மேற்க்கொண்டு வருகின்றார்கள்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .