Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2011 மே 21 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலையை வட மாகாணத்திற்குப் பொறுப்பாக இருக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலாயத்தின் துணை உயர் ஸ்தானிகர் வி.மகாலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டதுடன் கூட்டுறவு வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையினர் மற்றும் பொது மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலையை இயக்குவதற்கு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ள பணிப்பாளர் சபையினர் இந்திய தூதரகத்திடம் வைத்தியசாலையை இயக்க உதவி செய்யும் படியும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் கூட்டுறவு வைத்தியசாலைக்கு விஜயம் மேற் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதி உயர் ஸ்தானிகருடன் பணிப்பாளர் சபை மற்றும் பொது மக்களுக்கு இடையேயான சந்திப்பை மேற் கொண்ட பிரதி உயர் ஸ்தானிகர் கூட்டுறவு வைத்தியசாலையை இயக்குவதற்கு வேண்டிய உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .