Suganthini Ratnam / 2011 மே 31 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறியவர்கள் தங்களுக்கான பாதுகாப்பு மற்றும் தங்களது உடமைகள், சொத்துக்கள் குறித்து மிக அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அடிப்படைத் தேவைகள் எதுவானாலும் பூர்த்தி செய்யப்படாது இருக்குமானால் தங்களது பிரதேச செயலாளர்களுக்கு தெரியப்படுத்துமாறும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.
வலிவடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் விஷ ஜந்துக்களின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சிறுவர்களையும் முதியோர்களையும் தனிமையில் விட்டுச் செல்ல வேண்டாமென்றும் அவர்களின் உயிர்களுக்கான பாதுகாப்பை வழங்குமாறும் யாழ். அரசாங்க அதிபர் கூறினார்.
இறைக்கப்படாத கிணறுகளிலிருந்து குடிநீர் எதனையும் சமைப்பதற்கோ அல்லது குடிப்பதற்கோ பயன்படுத்த வேண்டாமெனவும் யாழ். அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.
14 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago