2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கசிப்பு உற்பத்தி பொருட்களை வைத்திருந்த நபருக்கு தண்டம்

A.P.Mathan   / 2011 ஜூன் 06 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)

சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் கோடா வைத்திருந்த நபர் ஒருவருக்கு யாழ். நீதிமன்றில் 90 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸாரால் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது கோப்பாய் மேற்கில் சட்டவிரோதமான முறையில் கோடா வைத்திருந்தமை மற்றும் கசிப்புக் காய்ச்சுவதற்கான உபகரணங்கள் வைத்திருந்தமைக்காக யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரணை செய்த மேலதிக நீதவான் பிறேம் சங்கர் 1456 கிராம் கோடா வைத்திருந்தமைக்காக 68 ஆயிரம் ரூபாவும், கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் வைத்திருந்தமைக்காக 22 ஆயிரம் ரூபாவும் அபராதம் விதித்துள்ளார். குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டு 90 ஆயிரம் ரூபாவைத் தண்டமாகச் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .