Super User / 2011 ஜூலை 07 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யாழினி)
வட மாகாணத்தில் முதன்முதலாக யாழ். போதனா வைத்தியசாலையில் 106.3 மில்லியன் ரூபா செலவில் இரத்த குழாய் சிகிச்சை முறை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் இந்த நோய்க்கு கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகளிலும் அங்குள்ள தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனால் நோயாளர் பல சிரமங்களக்கு உள்ளானார்கள். இந்த சிகிச்சை முறை யாழ் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து இப்பகுதி மக்கள் நன்மை அடைந்துள்ளார்கள்.
இச்சிகிச்சைக்கான உபகரணங்களை இலகு கடன் அடிப்படையில் பிரான்ஸ் வழங்கியுள்ளது. இச்சிகிச்சை நிலையத்திற்கான கட்டிட நிர்மாணத்திற்கு யு.என்.டி.பி மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பு என்பன 6.3 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளன.
12 minute ago
16 minute ago
45 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
45 minute ago
54 minute ago