Suganthini Ratnam / 2011 ஜூலை 18 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மல்லாகம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் இரவுவேளையில் நுழைந்த திருடர்கள் இருவர் கத்தியைக் காட்டி சங்கிலியை அறுக்க முற்பட்டபோது வீட்டிலுள்ளவர்கள் கூச்சலிட்டதைத்; தொடர்ந்து அவர்கள் தப்பியோடியுள்ளனர்.
மல்லாகம் தொந்தனை வீதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
இது சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
வீட்டிலுள்ளவர்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வேளையில், முகத்தை மறைத்தபடி கத்திகள் மற்றும் பொல்லுகள் சகிதம் வீட்டினுள் நுழைந்த இரு திருடர்கள் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டனர்.
கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த அயவர்களையும் வீட்டிலிருந்த தந்தையையும் தாக்கிவிட்டு இரு திருடர்களும் தப்பியோடியுள்ளனர்.
தந்தை காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
21 minute ago
50 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
50 minute ago
59 minute ago