Suganthini Ratnam / 2011 ஜூலை 18 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
சிறுவர் புற்றுநோயாளர்களின் நன்மை கருதி முழுமையான வசதிகளைக் கொண்ட புற்றுநோயாளர் வைத்தியசாலையொன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு நிதி சேகரிக்கும் முகமாக மாத்தறை தேவேந்திரமுனை வெளிச்ச வீட்டிலிருந்து ஆரம்பமான நடைப்பயண அணியினர் இன்றுவரை சுமார் 459 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து அநுராதபுரத்தை அடைந்துள்ளனர்.
சுமார் 200 இலட்சம் ரூபாவை நிதியை திரட்டும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைப்பவனிக்கு தென்னிலங்கையைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்களெனப் பலரும் உதவிகளை வழங்கி வருவதாக நடைபாதை பவனியை மேற்கொண்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றார்கள். இந்த நடை பாதைப் பயண அணியினரை வீதிக்கு வீதி நின்று பாடசாலை மாணவர்கள் வரவேற்பதுடன், தம்மாலான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்;தன, குத்துச்சண்டை வீரர் வன்னி ஆராய்ச்சி முதலானோரும் இந்த நடைபவனியில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
16 minute ago
20 minute ago
49 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
49 minute ago
58 minute ago