Kogilavani / 2011 ஜூலை 20 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் யாழ். தேர்தல் தெரிவத்தாட்சியாளருமான இமெல்டா சுகுமார் இன்று புதன்கிமை தெரிவித்தார்.
போதுமான அளவு அதிகாரிகள் வெளியிடங்களில் இருந்து வரவழைக்கப்படவுள்ளதுடன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மேலதிகமாக பொலிஸ் பிரிவினரை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 449,234 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 3 நகர சபைகளுக்காக 29 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர் 13 பிரதேச சபைகளுக்காக 172 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தள்ளார்.
யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பதவியேற்றப்பின் அங்கு நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago