Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 21 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களாக செயற்படவுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று வியாழக்கிழமை ஒரு மணியுடன் மூடப்பட்டு கிராம அலுவலர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
நாளைமறுதினம் சனிக்கிழமை யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேசசபைகள் மற்றும் நகரசபைகளுக்கான வாக்களிப்புகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இன்று வியாழக்கிழமை ஒரு மணியுடன் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் மீண்டும் திங்கட்கிழமை முதல் வழமைபோன்று இயங்குமென கல்வித்திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ். மாவட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கடமையாற்றும் சிரேஷ்ட ஆர்வலர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், ஏனைய உதவியாளர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை இரவு தேர்தல் திணைக்களத்தின் பணிப்புரைக்கமைய இலவசமாக உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago