2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மின் சீரின்மையால் இலத்திரினியல் உபகரணங்கள் சேதம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 21 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (கிரிசன்)

தெல்லிப்பளைப் பகுதியில் மின்சாரம் சீரின்மையால் இலத்திரனியல் உபகரணங்கள் பரவலாக சேதமடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் திடீரென்று ஏற்பட்ட மின் அதிகரிப்பு காரணமாக மல்லாகம் சோடாக் கம்பனி கிழக்கு ஒழுங்கையில் வசிக்கும் பலருடைய தொலைக்காட்சிப்பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் ஏனைய மின் உபகரணங்களும் எரிந்து சேதமடைந்துள்ளன.

இது குறித்து மின்சாரசபையினர் எந்தவித நடவடிக்கையும்  எடுப்பதில்லையென பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.           


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X