Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 21 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். உள்ளூராட்சி தேர்தல் கடமையில் அரச நிர்வாக சேவை பயிற்சியாளர்களை தேர்தல் கடமையில் அமர்த்துவது உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும் என்றும் இவர்கள் சுகந்திரமாக முறையில் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உதவித் தேர்தல் ஆணையாளரிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்னர்.
இன்று வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பிரதி நிதிகளுக்கும் உதவித் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழில் இருந்து வெளிவரும் உள்ளூர் பத்திரிகையில் தேர்தல் விதிமுறைகளை மீறி இன்றைய தனது பதிப்பில் முன்பக்கத்தில் தேர்தல் விளம்பரங்களை அச்சிட்டு வெளியீடு செய்திருப்பதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதாக பொய்ப்பிரச்சரத்தை மேற்கொண்டு இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் யாழில் நீதியான தேர்தலை நடத்துவதற்கு அரசு தவறியிருப்பதாகவும் நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கு எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை என்றும் தேர்தல் விதி முறைகள் பல யாழில் மீறப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார், உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.கருணாநிதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஜக்கிய மக்கள் சுகந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் முகவர்கள் ஜக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் ஜே.வி.பி பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago