2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவது குறித்து தேர்தல் ஆணையாளர் கவனத்துக்கு

Suganthini Ratnam   / 2011 ஜூலை 22 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் உள்ளூராட்சிமன்றத்  தேர்தலில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உதவித் தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடியதுடன், தமது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இக்கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவென 'மாலை முரசு' என்ற செய்தித்தாள் விடுத்த செய்தியை உதவித் தேர்தல் ஆணையாளரிடமும் யாழ். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில்  தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவது தொடர்பாக தேர்தல் ஆணையாளரின்  கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்  அது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுமென உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X