2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மதுபோதையுடன் வாகனங்கள் செலுத்தும் சாரதிகளின் எண்ணிக்கை யாழில் அதிகரிப்பு

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில் மதுபோதையுடன் வாகனங்கள் செலுத்தும் சாரதிகளின் தொகை அதிகதித்தள்ளதாக யாழ். போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸ் பிரிவு தெரித்துள்ளது.

ஏ - 9 பாதையூடாக யாழ்ப்பாணத்திற்குள் நுழையும் வாகனங்களின் சாரதிகள் சிலர் மதுபோதையுடன் வாகனங்கள் செலுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களினால் யாழில் வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சாரதிகள் மதுபோதையில் போக்குவரத்து விதிகளை மீறி செயற்படுவதுடன் இவர்களினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய சாரதிகள் 8 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாகவும் யாழ். போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸ் பிரிவு மேலும் தெரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X