Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 01 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள கரம்பன் முருகமூர்த்தி கோவிலிலுள்ள விக்கிரகங்களும் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திருட்டுப்போயுள்ளதென்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த சனிக்கிழமை இரவு ஊர்காவற்றுறையிலுள்ள கரம்பன் காளி கோவிலிலும் திருட்டுப்போயுள்ளதாகவும் காளி கோவிலின் கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் தங்கநகைகள் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்களைத் திருடிச்சென்றுள்ளதாகவும் திருடர்கள் தொடர்ச்சியாக ஆலயங்களை இலக்குவைத்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் ஆலய நிர்வாக சபையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊர்காவற்றுறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்படி திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
28 minute ago
38 minute ago