2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழில் அசாதாரண சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர விசேட செயற்குழு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 06 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை  முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விசேட செயற்குழுவொன்று வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி  தலைமையில் இயங்கவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் தொடர்பில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  உயர்மட்ட மாநாடொன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'கடந்த 30 வருடகாலமாக நாம் அனுபவித்த துன்பத்திலிருந்து விடுபட்டு சமாதானமாக வாழும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவங்களையிட்டு அரசாங்கம் கவலையடைகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ். மக்களின் பிரச்சினைகள் குறித்து அதிக அக்கறையுடன் உள்ளார். இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக  அவர் என்னை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியுள்ளார்.

மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு இந்த செயற்குழு தொடர்ந்து செயற்படும்.  மாதம் ஒருமுறை கூடி மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்க்கமான முடிவுகளை எடுக்கும். இந்த உயர்மட்ட செயற்குழுவானது மக்கள் எதிர்நோக்கி வருகின்ற உடனடிப் பிரச்சினைகளுக்கு விரைந்து செயற்பட்டு தீர்வினை முன்வைக்குமென நான் இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்' என்றார்

இந்த விசேட மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீல் தலுவத்த, ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சி.அலன்ரின், யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம், பொதுவமைப்புக்களின் பிரதிநிதிகள், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், யாழ். வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், யாழ். மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பொதுமக்களெனப் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • bzukmar Tuesday, 06 September 2011 07:48 PM

    யாழ் நிலைமை பற்றி ஆராயும் கூட்டத்திட்கு,தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்,பி.களுக்கு அழைப்பு கொடுபடவீல்லையா,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X