Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 13 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வட மாகாண கிராம புற பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் விஞ்ஞான அறிவியல் ரீதியான மனோபாவத்தினை அதிகரிக்கும் நோக்குடன் தொழில்நுட்வியல் ஆராய்ச்சி அமைச்சின் அனுசரனையுடன் கொழும்பின் விஞ்ஞான ரீதியான முக்கிய இடங்களை பார்வையிடுவதற்கான சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டது.
முதலாவது தொகுதி மாணவர்கள் கிளிநொச்சி கல்வி வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டார்கள். இக்குழுவில் இந்துக் கல்லூரி, திருவையாறு மகா வித்தியாலயம், பிரமந்தனாறு மகா வித்தியாலயம், சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கனகாம்பிகைக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் இருந்து 235 மாணவர்களும், 12 ஆசிரியர்களும், ஒரு உத்தியோகத்தரும் இதில் பங்குபற்றியிருந்தார்கள்.
இக் கல்விச்சுற்றுலா கடந்த நவம்பர் 7ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெற்றது. இக்குழுவினர் கைத்தொழில், தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தேசிய மிருக காட்சிச்சாலை ஆகியவற்றினை பார்வையிட்டனர்.
இதேவேளை, இரண்டாம் தொகுதி மாணவர்கள் யாழ்ப்பாண கல்வி வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டார்கள்.
இக்குழுவில், உரும்பிராய் சைவ தமிழ் வித்தியாலயம், யா.அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம், ஊரெழு கணேசா வித்தியாலயம், வதாரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயம், புதுக்கலட்டி சிறி விஷ்ணு வித்தியாலயம், அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயம், சீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, சிறுப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் இருந்து 244 மாணவர்களும், 4 அதிபர்களும், 21 ஆசிரியர்களும், 2 பெற்றோர்களும் இதில் பங்குபற்றினார்கள். இக்குழுவின் கல்விச் சுற்றுலா நவம்பர் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .