Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 17 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். கீரிமலை, சேந்தாங்குளம் பகுதியில் அண்மையில் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்ட மக்கள் தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் மலசல கூடங்களை அமைத்து வந்த நிலையில் அவர்களது நிர்மாணப்பணிகளை கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இப்பகுதி மக்கள் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனிடம் நேற்று புதன்கிழமை முறையிட்டுள்ளனர்.
சமுர்த்தித் திட்டத்தின் ஊடாக சேவாலங்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் வலி . வடக்கிலுள்ள சேந்தாங்குளம் பகுதியில் 38 மலசல கூடங்களை அமைப்பதற்கு பிரதேச சபை அனுமதி வழங்கியிருந்தது. மலசல கூடங்களை அமைக்கவென ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 80 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேந்தாங்குளம் பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு கடற்கரையிலிருந்து 500 மீற்றருக்கு அப்பால் மலசல கூடங்களை அமைப்பதற்கான இடங்களை வலி. வடக்குப் பிரதேசசபையினர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் பார்வையிட்டு, அதற்கான அனுமதியையும் வழங்கியிருந்தனர். எனினும் அவ்விடத்தில் மக்கள் மலசல கூடங்களை அமைக்க முற்பட்டவேளையில் அங்கு விரைந்த கடற்படையினர் குறித்த இடங்களில் மலசல கூடங்களை அமைக்க அனுமதியில்லை எனத் தெரிவித்ததுடன், கட்டுமானப் பணிகளையும் இடைநிறுத்த உத்தரவிட்டனர்.
இச்சம்பவம் பற்றி அறிந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வலி.வடக்குப் பிரதேச சபைத்தலைவர் சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர் ந.மதியழகராஜா ஆகியோர் சேந்தாங்குளம் பகுதிக்கு நேற்றைய தினம் சென்றனர்.
கடற்படையினரின் நடவடிக்கையால் மலசல கூடம் அமைக்கும் திட்டம் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலையே தமக்கு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க இவர்களிடம் முறையிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடற்படை அதிகாரிகளிடம் ஈ.சரவணபவன் எம்.பி தொலைபேசி ஊடாகத் தொடர்புகொள்ள முயன்ற போது அது கைகூடவில்லை. எனினும் 'குறித்த திட்டத்துக்கான அனுமதியை பிரதேச சபை வழங்கிவிட்டதால் மக்கள் மலசல கூடம் அமைக்கும் பணியை தொடரலாம். கடற்படையினரால் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் என்னுடன் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு நிலைமையை விளக்கி திட்டத்தை தொடர வழிசெய்வேன்' என்று மக்களிடம் வலி. வடக்குப் பிரதேசசபைத் தலைவர் சுகிர்தன் உறுதியளித்தார்.
Rajan Friday, 18 November 2011 07:12 AM
வடக்கு-கிழக்கில் செயற்படுவது ஜனநாயகம் என்ற போர்வைல் பின்னணியில் உண்மையாக செயல்படுவது இராணுவ ஆட்சியே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .