Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 17 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
நிரந்தர சமாதானம் எங்களுக்கு கிடைத்துள்ள தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்துவதற்காக செயற்பட வேண்டுமென பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இரண்டாவது சிறுவர் நீதிமன்றம் யாழ். குருநகரில் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'யாழ். குடாநாட்டில் திறக்கப்படுகின்ற முதலாவது சிறுவர் நீதிமன்றம் நீதித்துறைக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்பாகும். நாட்டின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக்கு நீதித்துறை மிகச் சிறப்பாக கடமையாற்ற வேண்டும்.
சிறுவர்களின் வாழ்வியல், உளத்திறன் என்பவற்றை அவதானமாக கையாள வேண்டும். குற்றமிழைக்கும் சிறுவர்களைக் கையாளுபவர்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும்
சிறுபிராயத்தில் குற்றமிழைக்கும் சிறுவர்கள் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், வழக்குத்தொடுநர், நலன்புரிச் சேவையாளர்கள், சமூக சேவையாளர்கள் மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். குற்றமிழைக்கும் சிறுவர்களை சாதாரண சட்டத்தை மீறுபவர்களைப்போன்று கையாள முடியாது. அவர்களின் உணர்திறன், அறிவுத்திறன் ஆகியவற்றை மனதில் கொண்டு சிறுவர் நீதிமன்ற நீதிபதிகள் அவர்களின் விடயத்தைக் கையாள வேண்டும்.
சிறுபிராயத்தில் குற்றமிழைக்கும் சிறுவர்களை சீர்திருத்தி அவர்களை பெற்றோர்களிடமோ உறவினர்களிடமோ ஒப்படைக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் நீதித்துறைக்கு உள்ளது' என்றார்.
இந்த சிறுவர் நீதிமன்றத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், நீதிபதிகளான ஆ.ஆனந்தராஜா, பிரேமசங்கர், சிறிநீதி நந்தசேனன், யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத் தலைவி வசந்தா அபிமானசிங்கம் மற்றும் சட்டத்தரணிகள் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்:
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .