Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 17 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழில் இயங்கும் ஆரம்ப நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு இந்திய உதவிகளுடன் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் தமிழில் இயங்கும் ஆரம்ப நீதிமன்றங்களில் தமிழ் மொழிமூலமான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக இப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரினால் இன்று திறந்துவைக்கப்பட்டது.
யுத்தத்தினால் சேதமடைந்த இந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதி 70 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டமை குறிப்பித்தக்கது.
இத்திறப்பு விழாவின் பின்னர் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.
பல்லினத் தன்மை கொண்ட இந்நாட்டில் மொழிகளைக் கையாள்வது தொடர்பாக புதிய செயற்திட்டமொன்றை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஆரம்ப நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வழக்குகள் நடத்தப்படுவதை ஊக்குவிக்க அங்கு பணியாற்றும் நீதிபதிகளுக்கு இந்திய நீதிபதிகளுடன் இணைந்து பயிற்சிகளை வழங்குவதற்கு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம்.
யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தை ஊக்குவிப்பதற்காக நீதித்துறை, சட்டவிரிவுரைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சட்ட ஆய்வு நிறுவகமொன்றை விரைவில் தோற்றுவிக்கவுள்ளோம். இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஏனைய நீதிமன்றங்களுககு உள்ளதைப் போன்று தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மொழி மூல நீதிமன்றங்களை வலுவூட்ட ஏற்பாடுகளை செய்துவருகிறோம்" என்றார்.
இக்கூட்டத்தில் பருத்தித்துறை நகரசபையின் தலைவரும் பருத்தித்துறை, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான சபா.ரவீந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். பத்திரகாளி அம்மன் கோவில் பிரதம குரு தியாக சோமஸ்தராஜக் குருக்கள், தும்பளை அஞ்சலியகப் பணிப்பாளர் அருட்திரு டேமியன் அடிகளார், பருத்தித்துறை முகைதீன் ஹமீதியா பள்ளிவாசல் மௌலவி எம்.ஏ. அஸீஸ் நீதியமைச்சின் செயலாளர் சுகத கம்லத், யாழ் மேல் நீதிமன்ற நீதிபத பே.பரமராஜா, பருத்தித்துறை மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோர் உரையாற்றினர். சட்டத்தரணி பவானி சற்குணராசா நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
KD Friday, 18 November 2011 03:33 AM
நாங்கள் எதற்கு எடுத்தாலும் இந்தியாவின் காலில் விழுகிறோம் ஏன்? இது சரிதானா.. சொல்லுங்கள்?
Reply : 0 0
sahabdeen Friday, 18 November 2011 06:19 AM
அங்குள்ள நீதிபதிகளுக்கு யாரு பயிற்சி வழங்குவது ?? எப்பதான் இங்குள்ளவர்களுக்கு இது விளங்குமோ!
Reply : 0 0
Kalkudah Adam Friday, 18 November 2011 07:13 AM
பாவம் எங்கட வடக்கு, கிழக்கு நீதிபதிகள்.
Reply : 0 0
mbm Friday, 18 November 2011 10:07 PM
நம்மிடமும் நிறைய சக்திவாய்ந்த நீதிபதிகளும் வழக்கவழக்கறிஞர்களும் இருக்கும்போது நாம் ஏன் அதை பயன்படுத்தாமல் மற்றொரு நாட்டை நம்புகிறோம் என்றுதான் விளங்கல!
Reply : 0 0
fazal Saturday, 19 November 2011 02:11 PM
வேண்டா பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் !!!
Reply : 0 0
thivaan Monday, 21 November 2011 10:45 AM
நாங்கள் பாக்கிஸ்தான் மனோபாவத்தில் இருந்தால் , இந்தியா என்றால் கசக்கும்.
Reply : 0 0
UMMPA Wednesday, 23 November 2011 08:13 PM
கிணற்று தவளைகள் மாதரி சிந்திக்காமல் கொஞ்சம் நாட்டு நடப்புகளுடன் சிந்தித்து கருத்துகூறுங்கோ கொஞ்சம் சிறப்பாக இருக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .