Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 21 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பருவமழை காரணமாக யாழ். குடாநாட்டின் தாழ்வுப்பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கரையோரப்பகுதிகளின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கும் நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையம், அப்பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
கரையோரப்பகுதிகளான காக்கைதீவு, நாவாந்துறை, பொம்மைவெளி, மணியந்தோட்டம், பூம்புகார் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் உட்புகும் வாய்ப்புகள் காணப்படுவதாக யாழ். மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .