2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கான சுவீடன் தூதுவர் – யாழ். மாவட்ட செயலாளர் சந்திப்பு

Super User   / 2011 நவம்பர் 21 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழின் அரச நிர்வாகமும் அரசியலும் இணைந்து எவ்வாறு மக்களுக்கு பணியாற்றுகிறது என இலங்கைக்கான சுவீடன் தூதுவர் லால் ஓல் லிங்ரன் வினவியதாக யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இதன்போது, யாழின் நிர்வாக கட்டமைப்புக்களின் இயங்கு நிலை குறித்து விரிவாக இலங்கைக்கான சுவிடன் தூதுவர் ஆராய்ந்ததாக அவர் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான சுவிடன் தூதுவர் லால் ஓல் லிங்ரன் மாவட்ட செயலாளரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, யாழ். மக்களின் தற்கால வாழ்வியல் குறித்தும் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

யாழில் மீள்குடியேற்றம் முழுமையாக நிறைவடையாமல் இருப்பது குறித்து தூதுவர் கேள்வி எழுப்பியதுடன் கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்தும் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு 15 மில்லியன் ரூபா தேவை என தெரிவித்ததாக  மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .