2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை சுற்றுமதில் விழுந்து மாணவர் பலி

Kogilavani   / 2011 நவம்பர் 21 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழில். பாடசாலையொன்றின் சுற்றுமதில் இடிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில் யாழ்.வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி கற்கும் ஜெகநாதன் செந்தூரன் (வயது 7) என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.

மேற்படி மாணவரின் சடலம் சாவகச்சேரி ஆராத வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .