2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் திருமறைக் கலாமன்றதினம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 30 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

திருமறைக் கலாமன்றதினம் எதிர்வரும் 3ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்படவுள்ளதாக மன்றத்தின் வள ஆளுநர் வள்ளுவன் சுவாமிநாதன் தெரிவித்தார்.

அன்றையதினம் காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் கலைத்தூத கலையரங்கத்தில் நடைபெறவுள்ள திருப்பலியுடன் ஆரம்பமாகும் நிகழ்வுகளில் காலை 10 மணிக்கு இரத்ததான நிகழ்வு திருமறைக்கலாமன்ற மண்டபத்திலும் கலை நிகழ்வுகள் மாலை 4.30 மணிக்கு கலைத்தூது கலையரங்கிலும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, திருமறைக் கலாமன்றத்தின் 20 கிளைகளிலும் திருமறைக் கலாமன்றதின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், சர்வமத வழிபாடுகளும் ஒன்றுகூடல்களும் நடைபெறவுள்ளன.

4ஆம் திகதி அனைத்து திருமறைக் கலாமன்றத்தின் இணைப்பாளர்கள், கலைஞர்கள்  வவுனியாவில் ஒன்றுகூடி மன்றதினத்தினை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

திருமறைக் கலாமன்றத்தின் தலைவர் அருட்தந்தை கலாநிதி மரிய சேவியர் தலைமையில் நடைபெறும் திருமறைக் கலாமன்றத்தின் 46ஆவது ஆண்டு விழா இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .