Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 05 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி, தாஸ்)
உயர் பாதுகாப்பு வலயமான மாதகல் மேற்குப் பகுதியில் தங்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் இன்று திங்கட்கிழமை ஈடுபட்டனர்.
மானிப்பாய் அந்தோனியார் கோவிலில் ஒன்றுகூடிய இம்மக்கள், அங்கிருந்து சென்று வலி. தென்மேற்கு பிரதேசசபைத் தலைவர் எஸ்.ஜெபநேசனிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.
மாதகல் மேற்கு உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பகுதியில் படைமுகாம் அமைக்கப்படவுள்ளதாக கேள்விப்பட்டதைத் தொடர்ந்து மாதகல் மேற்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியைச் சேர்ந்த இம்மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
'எங்களின் நிலம் எமக்கு வேண்டும், 'எங்கள் காணிகளுக்கு வரி அறவிடும் பிரதேச சபையே எங்கள் நிலத்தை மீட்டுத்தாருங்கள்', 'மஹிந்த அரசினால் மீட்கப்பட்ட நிலங்களில் மீண்டும் இராணுவ முகாம்களா?' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மானிப்பாய், சண்டிலிப்பாய் பிரதேசங்களில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு:-தாஸ்
bzukmar Monday, 05 December 2011 08:12 PM
உங்கள் கோரிக்கை நியாயமென்றாலும்இ மகி அரசு எந்த நிலைப்பாட்டில் உள்ளதென கடவுளும் அறிவாரோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago