2025 மே 17, சனிக்கிழமை

கூட்டுறவு துறையில் சிறந்த மக்கள் சேவையாளர்கள் கௌரவிப்பு

Super User   / 2011 டிசெம்பர் 05 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்ட கூட்டுறவு சபையினால் அமரர் வீ.வீரசிங்கத்தின் 47ஆவது நினைவு தினம் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கூட்டுறவுத் துறையில் சிறந்த மக்கள் சேவையாளர்கள் யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமாரினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் இலங்கை தேசிய கூட்டுறவு சபை தலைவர் என்.பந்துல, வட மாகாண கூட்டுறவு சபையின் ஆணையாளர் அருந்தவநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது உரையாற்றிய யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவிக்கையில்,

யாழ்.மக்களுக்கு யுத்த காலத்திலும் தற்போதும் சேவையாற்றியவர்கள் என மக்களின் மனங்களில் நிற்பவர்கள் கூட்டுறவாளர்களே.

கடந்த கால போர் அனர்த்தங்களில் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் சேவையாற்றியவர்கள் இவர்கள். இவர்கள் வாழும் காலங்களில் கௌரவிக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாய தேவையாகும்

மக்களின் துயர்களில் தங்களை இணைத்து அவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் அரசினாலும் வழங்கப்பட்டு வரும் உலர் உணவுகளை மக்களின் வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக விநியோகித்து வருபவர்கள் இவர்களே.

மக்களின் மனங்களில் அவர்கள் என்றும் போற்றப்பட்டுக் கொண்டு இருப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .