Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 05 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
சுன்னாகம் பொலிஸ் காவலிலிருந்த வேளையில் மரணமடைந்த இளைஞனின் மரணம் தொடர்பாக வீரவேங்கைக்கு வணக்கமெனக் கூறி பதாகையொன்று வெளிவந்தமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன் தெற்கில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரெனக் கூறி கைதுசெய்யப்பட்ட மனநோயாளியான சுமனன் (வயது 28) என்பவரே பொலிஸ் காவலிலிருந்த வேளையில் மரணமடைந்து அவருடைய சடலம் மொனராகலைக்கு கொண்டு செல்லப்பட்டு மரண விசாரனையும் இடம் பெற்றது.
இந்நிலையில் இத்தகைய பதாகையை வெளியிட்டு மரணமடைந்தவரை புலிகளெனக் கூறி பிழையான வழியில் வழக்கை திசை திருப்பும் செயற்பாட்டில் குறிப்பிட்ட சிலர் ஈடுபட்டுள்ளதாக இளைஞருடன் தொடர்புடையவர்களும் மற்றும் உறவினர்களும் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025