Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 06 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
தென்னிலங்கையிலிருந்து அழைத்துவரப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு யாழ். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் வைத்து நேற்று திங்கட்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் 50 பேர் காலி மாவட்டத்திலுள்ள ஹிக்கடுவைப் பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே, நேற்று திங்கட்கிழமை ஹிக்கடுவையிலிருந்து 50 இளைஞர், யுவதிகள் யாழ். மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற பிரதிப் பணிப்பாளர் ஈஸ்வரதாஸ் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் ஹிக்கடுவை உபாநந்த தேரர் ஆசியுரையாற்றினார். யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் முத்துக்குமாரு இராதாகிருஸ்ணன், வடமாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் விமலேஸ்வரி, காலி மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் முனிதாச, ஹிக்கடுவை இளைஞர் சேவைகள் மன்ற இளையோர் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபிணி சொய்சா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
.jpg)
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025