2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழ்.மாநகர சபை உறுப்பினர் மங்கள நேசன், ஈபிடிபி கட்சியிலிருந்து இடை நீக்கம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 07 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

ஈபிடிபி கட்சியின் உறுப்பினரும் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான மனுவல் மங்கள நேசன் தமது கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமான முறையிலும் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டதற்காக அவரை ஈபிடிபியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்துவதாக ஈபிடிபி கட்சியின் உயர்மட்டம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈபிடிபி தலைமை செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஈபிடிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் இதனை ஊடகவியலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

மனுவல் மங்கள நேசன் என்பவர்  பெண்கள் விடயத்தில் அநாகரிகமாக முறையில் நடந்து கொண்டமையினாலும் மதுவின் பிடியில் இருப்பதன் காரணமாகவும் கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கமலேந்திரன் தெரிவித்தார்.


  Comments - 0

  • neethan Thursday, 08 December 2011 12:48 AM

    மனுவல் மங்களம்,மாநகர உறுப்பினராக முன் மதுவுக்கு அடிமையானாரா,உறுப்பினர் ஆனா பின் மதுவுக்கு அடிமையானாரா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X