2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மலக்கழிவுகளால் கொடிய தொற்றுநோய் பரவும் அபாயத்தில் கோப்பாய் மயானம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 09 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கோப்பாய் மயானத்தில் மலக்கழிவுகள் மற்றும் உணவகங்களின் கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டு வருவதால் அங்கு தேங்கியுள்ள நீருடாக தொற்றுநோய் பரவக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் நெருப்புக்காய்ச்சல், வாந்திபேதி போன்றவை பரவும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்

இந்தப்பகுதியில் நாளாந்தம் பல கொள்கலன் ஊர்திகளில் கொண்டுவரப்பட்டு கழிவுப்பொருட்கள் கொட்டப்படுகின்றன.

'சுகாதாரத்துறை உணவகங்களில் கழிவுகளையும் உடைவுகளையும் பார்க்கிறதே தவிர மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயத்தை அறியவில்லை' என்று அப்பகுதி மக்கள் பலர் விசனம் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X